Tuesday, December 31, 2013

வாழ்த்துக்கள்!

2014
நீங்கள் எடுக்கும் எல்லா 
முயற்சிகளுக்கும் இந்த 
ஆங்கிலப்புத்தாண்டு, வரப்போகும் 
தமிழர் பொன்னாள் தைப்பொங்கல் 
திருநாளுக்கு கட்டியம் கூறும் 
நல்வரவாக அமைந்து ,உங்களுக்கு உத்வேகத்தையும் வெற்றியையும் 
தந்து,உங்கள் வாழ்வு வளமாகவும், 
சிறப்பாகவும் அமைய, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் 
சுற்றத்தார் 
அனைவருக்கும் எமது மனங்கனிந்த இனிய  நல் வாழ்த்துக்கள்!

ஞானகுமாரன்.

Thursday, December 26, 2013

ஆங்கிலேய புத்தாண்டு தினம் தான் , நம்மை நாம் மாற்றும் தினமா?

வணக்கம் !

தொன்மையான பழந்தமிழர் மரபில் நாம் வாழ்ந்தாலும், வழி நடந்தாலும் ,அல்லாவிடினும், நமது வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் ஆங்கிலேயர் வழி வந்த கிருத்துவ வருட கணக்கில் தான் கடைபிடிக்கப்படுகிறது, அத்தகைய நடைமுறைகளின் ஒரு அங்கமாக இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது.

ஆண்டுகள் எதனடிப்படையின் கீழ் கணக்கிட்டாலும், அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் ஒன்றுதான், நம்முடைய வயதுகளின், சூழ்நிலைகளின்   அடிப்படையில் அதன் கொண்டாட்டங்கள் அமைந்தாலும், நாம் நம்முடைய சில விட நினைக்கும் அல்லது ஆரம்பிக்க நினைக்கும்  விசயங்களை , ஒரு உத்வேகத்துடன் அந்த எண்ணத்தினை நடைமுறைப்படுத்த தேர்ந்தெடுக்கும் நாள் தான் இந்த ஆங்கிலேய  புத்தாண்டு தினம். 

இந்த வருடக்கடைசியில் அத்தகைய விசயங்களில் அதிகம் ஈடுபட்டுக்கொண்டு , நான் இதிலிருந்து  புத்தாண்டு தினம் முதல் விடுபட்டுவிடுவேன் என சமாதானம் கூறிக்கொண்டு விட நினைக்கும் செயல்களில் அதிகம் ஈடுபடுவோர் ஏராளம்.

நாம் நம்முடைய பழம்பெருமை நினைத்து போற்றி, விட்டு விடுதலையாகும் மனமிருந்தால் எத்தகைய அல்செயல்களிருந்தும் எப்போது வேண்டுமானாலும்  விடுபடலாம், நலமுடன் வாழலாம்!

அல்லது ஆரம்பிக்க நினைக்கும் விசயங்களை, நினைத்த அன்றே  ஆரம்பிக்கலாம் அல்லவா?

ஆங்கிலேய புத்தாண்டு தினம் தான் , நம்மை நாம் மாற்றும் தினமா?

முடிவெடுத்த கணமே, நமக்கு புத்தாண்டு தானே! 

சிந்திப்போம்! பழமை போற்றுவோம்!! பாரம்பரியம் காப்போம்!!!

அன்பன்,

ஞானகுமாரன்.
Friday, December 6, 2013

மடிபா , ஒரு முறை எங்களுக்காக, இந்திய மண்ணில் பிறங்கள்!

இன்றைய நவீன உலகினில், பழமையைப்   போற்றுவது என்பது எளிதில்  காணக்கிடைக்காத அரிய ஒரு நிகழ்வு.

இத்தகைய அவசர உலகினில் நேற்றைய வெற்றிச்சரித்திரம் , அடிமை ஆப்பிரிக்க மக்களின் மொழிவாரி,இன வாரி அடிப்படை வேறுபாடுகள் களைந்து, அவர்களை ஒன்றிணைத்து , மாபாதக இன அடிமை அடக்குமுறைக்கு எதிராக போராடி , எத்தலைவனும் பெறாத அல்லது பெற விரும்பாத 27 ஆண்டு கால சிறை வாச இன்னல்களை,துயரங்களை தன் இனத்திற்காக இன விடுதலைக்காக  அனுபவித்து,  தனிப்பட்ட வாழ்வினை தியாகம் செய்து, தாயக மக்களுக்கு விடுதலை காற்றை பெற்றுத்தந்த பெருவீரன், தியாகத் தூண் , அந்த தேசத்தந்தையை தாயகத்தின் அரியணையில் அமரவைத்து பெருமிதம் கொண்ட ஆப்பரிக்க மக்கள் கொண்டாடிய  ,உலகம் போற்றிய  ,  சரித்திரம் நிகழ்த்திய தனிப்பெரும் தலைவன் இன்று நம்மிடையே இல்லை, இந்தியரான நமக்கும் அத்தலைவனை இழந்த ஆப்பிரிக்க மக்களின் ஆழமான சோகம், இயல்பாக வருவதில் ஒன்றும் வியப்பில்லை!

பாரதத்திருநாட்டின் ஒப்பற்ற விடுதலை போராட்ட தலைவனை, அண்ணல் அடிகளை  தன்  ஆதர்சன நாயகனாக, அவர்தம் இந்திய விடுதலைப்போராட்ட முறைகளை தன் தாயக விடுதலைப்போராட்ட முறைகளாக மாற்றி , வன்முறைப் பாதையிலிருந்து , அகிம்சைப்பாதைக்கு விடுதலை வேட்கைப்   போராட்டத்தை மாற்றி, தன்னை இழந்து, தன வாழ்நாளின் பெரும்பகுதியினை சிறையில் கழித்து , தன் இன அடிமைத்தளை நீக்கி தேச விடுதலை கிடைக்கச் செய்த உத்தமர் அல்லவா அவர் ?

நாம் வாழும் காலத்தில் காந்தியடிகள் இல்லை, தன்னலம் கருதாத் தலைவர்கள் இல்லை, தன் சாதனைக்காக தன் வாழ்நாள் முழுதும் அரியணையில் அமரவேண்டும், பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையின்றி, மறுமுறை அரியணை ஏற மறுத்து, அத்துடன், தீவிர பொதுவாழ்விலிருந்தும் விலகி , தாயக இளந்தலைமுறைக்கு வழிவிட்ட அந்த அற்புதத்தலைவன் நம்மிடையே இல்லையே , நம் தாய் நாட்டில் இல்லையே, நமக்கு அத்தகைய தலைவன் எப்போது கிடைப்பான் என்ற ஏக்கத்தில் , ஆப்பிரிக்க மக்களின் சோகத்தில் இயல்பாகப்  பங்கெடுத்து , தாய்த் திருநாட்டின் கடைக்கோடி குடிமகன், தமிழ்மகன் , மறைந்த மாமனிதனுக்கு தன சிரம் தாழ்த்தி  அஞ்சலி செலுத்துகிறான்! வணங்குகிறான்!!

மடிபா , 

ஒரு முறை எங்களுக்காக, 
இந்திய மண்ணில் பிறங்கள்!


எமது வடிவமைப்பில் உருவான சில இணையதளங்கள்.எமது வடிவமைப்பில் உருவான சில இணையதளங்கள்.


1.PHOTOPHONEENTERTAINMENT.COM

2.SATHURAGIRIHERBALS.COM

3.UCHCHISHTAGANAPATHITEMPLE,COM

4.MAHAVANAKRISHNAMANDIR.COM

5.KODAGANALLURSRISUNDARASWAMIGAL.TK

6.SATHURAGIRI.TK

7.KOONTHALURMURUGANTEMPLE.TKஉருவாகிக்கொண்டிருக்கும் சில தளங்கள்.

1.VAASAL.TK

2.TAMILVOICE.TK


3.HERBALWAY.TK

4.GNANAS.TK

5.GNANACOMM.TKதங்களின்   இணையதள  தேவைகளுக்கு,  எம்மை தொடர்பு கொள்ளுங்கள்!

நன்றி!

ஞானா.

ஈமெயில்: chennaignanas@gmail.com  


Monday, December 2, 2013
அல்லது 

www.sathuragiri.tk 


சதுரகிரி-யாத்திரை! பற்றிய முழு விபரங்கள் அடங்கிய இணையதளம் !

முதல் முறை செல்வோருக்கும்! செல்ல எண்ணுவோருக்கும்!

வாசித்து பயன்பெற வேண்டுகிறோம்!
Monday, November 18, 2013

இன்றைய நிஜம்!

இன்றைய நிஜம்!

கனவாகிப்போன நிஜத்தின் எச்சம்,
இன்னும் இருக்கிறது,
காய்ந்த விழிகளின் ஓரத்தில்,
கசந்த வாழ்வின்  தழும்புகளாக!

கனவுகளே, வாழ்க்கை என வாழும்,
எம் சகோதர சகோதரிக்கும்,
எல்லா உயிர்க்கும்,
நாளைய விடியல்
நன்மையாக அமைந்திட,

நல்லெண்ணங்களில், 
செயல்கள்  சிறந்திட,
என்றும் 
எண்ணங்களில் தூய்மைகொண்டு, 
வாழ்வோம்! நம்பிக்கையோடு !!!
Friday, November 1, 2013


உங்கள் இல்லங்களில் தீப ஒளிவெள்ளம் பரவி, இருளை அகற்றி , உற்சாகத்தையும் சந்தோசத்தையும் அளிக்கட்டும்!

அன்பர்  அனைவருக்கும் எமது மனப்பூர்வமான தீபாவளித்  திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Monday, October 21, 2013

அன்பு வலைத்தள வாசகர்களே!

அன்பு வலைத்தள வாசகர்களே! 
உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .

ஒரு வினாடி என்ற இந்தத் தளம் பொதுவான தகவல்களுடன் , சற்றே வாழ்வியல் காரணிகளையும் மூலிகைகளின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வையும் அவசியத்தையும் பகரும் தளமாக உருவாக்க முயன்று வருகிறோம்.

இங்கே எமது பதிப்புகளை நாள் தோறும் அன்பர்கள் வாசித்து செல்வதை இணைய பதிவின் அறிந்து வருகிறோம். எமது பதிவினை வாசிக்கும்   அன்பர்கள் , பதிவுகள் குறித்த தங்கள் மேலான கருத்துக்களை பகர்ந்து கொண்டால், மிக்க நன்றியுடையவர்களாக இருப்போம், மேலும், தங்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப பதிவுகள் இட , எமக்கு உதவிகரமாக அமையும்.

அன்பர்களின் எண்ணங்களை, மேலான கருத்துகளை, ஆர்வமுடன் எதிர்நோக்குகிறோம், நன்றி!

நல எண்ணங்களால் அன்பர் நலன் நாடும்,
அன்பன்,

ஞானகுமாரன்.


Saturday, October 12, 2013

அன்பு வாசகர்கள் , மூலிகை ஆர்வலர்கள் 
அனைவருக்கும் எமது உளங்கனிந்த விஜயதசமி , 
சரஸ்வதி பூஜை திருநாள் நல்வாழ்த்துக்கள்!இந்தப் புனித நன்னாளில் , இயற்கை மூலிகை வழி நின்று தேக ஆரோக்கியம் பெறவும் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லாவகை செல்வங்களும் பெற்று , எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று நல வாழ்வு வாழ , அன்னை விஜயலட்சுமியை , அன்னை சரஸ்வதியைப் போற்றி , முப்பெரும் தேவியர் பாதம் பணிந்து பிரார்த்திக்கிறோம்!

அன்புடன்,

ஞானகுமாரன்.

Saturday, October 5, 2013

மூலிகைகள் மற்றும் அவற்றின் உபயோக முறைகள்

வணக்கம் அன்பு வாசகருள்ளங்களே! 

தவிர்க்கமுடியாத சூழலால் பதிவுகள் இட  கால தாமதம் ஏற்பட்டதற்கு ,வருந்துகிறேன்.இன்று மூலிகைகள் மற்றும் அவற்றின் உபயோக முறைகள் பற்றி பார்க்கலாம்.

இன்று நமது பாரம்பரிய சித்த மூலிகை மருத்துவம் , முதல் வைத்திய முறையிலிருந்து மாறி, அலோபதி மற்றும் மற்றைய மருத்துவ முறைகளில் தீர்வு கிடைக்காததால் , மக்களால் நாடப்படும் கடைசி இடத்தில் இருந்தாலும், மீண்டும் நமது சித்த மருத்துவம் மக்களால் பெரிதும் விரும்பப்படும் காலம் , விரைவில் மலரும் என்ற நல நம்பிக்கையுடன் , இன்றைய பதிவினை அணுகலாம்.

எந்த மருத்துவ முறைகளிலும் , மருந்துகளுக்கு உரிய வீரியத்தினால், பக்க விளைவுகள் சிறிது இருக்கும், அதிகமாக அலோபதியிலும், குறைவாக சித்த மருத்துவத்திலும் காணப்படும்.

அந்த சிறிய அளவு பக்க விளைவுகளையும்  நீக்கும் விதமாகத்தான் , சித்த மருத்துவர்கள் அந்த முலிகைகளுடன் வேறு சில மூலிகைகள் சேர்த்து, பக்க விளைவுகளை கட்டுப்படுத்திவிடுவர். 

எனவே , எந்த மருந்தையும் அது சித்த மூலிகை மருந்துகளானாலும்  சரி, மருத்துவர் பரிந்துரைத்த காலத்திற்கு மட்டுமே சாப்பிட வேண்டும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என அறிந்த அன்பர்கள் , மருந்திற்கும் இது பொருந்தும் என மனதில் கொள்ள வேண்டும். 

தொடரும்..


Friday, August 30, 2013

இயற்கையோடு இணைந்து இயற்கையைப்போற்றி வாழ்வோம்!

பாரம்பரிய உணவுகள் உண்போம்! துரித உணவுகள் தவிர்ப்போம்!

மனதை நற்சிந்தனைகளால் வளமாக்குவோம்! அல்லதை விடுவோம்!

T V  முன் சிறிது நேரமே கழித்து குடும்பத்துடன் கூடி அளவளாவுவோம்!

முடிந்த அளவு உடல் நலப்பயிற்சிகள் செய்வோம்! ஆற்றல் பெறுவோம்!

மூலிகைகள் மூலம் உடலை வலுவாக்குவோம்! நோய்கள் விலக்கிடுவோம்!

வாழ்க தமிழர் பாரம்பரியம்! வளர்க தமிழர் பண்பாடு!


Thursday, August 15, 2013

இயற்கை குடி நீர்

அன்பர் அனைவருக்கும் இனிய  சுதந்திர திரு நாள் நல் வாழ்த்துக்கள் !

பெற்ற சுதந்திரம் பேணி காப்போம் !

நாளைய சந்ததிக்கு நம்மாலானதை  விட்டு செல்வோம் !

தூய இயற்கை காற்று !

இயற்கை மூலிகை வளம் !

இயற்கை குடி நீர் !

இயற்கை வாழ்வாதாரம் !

வாழிய தாய்த்திரு நாடு !  வளரட்டும் மனித நேயம் !Sunday, August 4, 2013

தமிழர் ஆரோக்கிய உணவு முறைகள்!


தமிழர் ஆரோக்கிய உணவு முறைகள்!

கடுக்காய் ஒரு பண்டைய மொழி !

காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்
மண்டலம் கொண்டால்
கோலை ஊன்றிக்
குறுகி நடந்தோரும்
கோலை வீசிக் குலாவி நடப்போரே! 
- தேரையர்.


கடுக்காய் சூரணம் [பொடி] செய்து [ தோல் பகுதி மட்டும் , கொட்டையை நீக்கி விடவும்], இரவு படுக்குமுன் , ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர, .

உடலில் சுவாசம்,வயிறு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து இன்னல்களையும் களையும் , மேலும்,கணக்கிலடங்கா பலன்களை இணையத்தில் தேடி அறியலாம் அல்லது கடுக்காய் சாப்பிட்டு பலன்களை உணரலாம்.


Wednesday, July 17, 2013

முதல் முயற்சி

வெற்றிபெற அனைவருக்கும் எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!


Welcome and thanks!

Friday, June 21, 2013

ஒரே தெய்வம்
எல்லா நாளும் ஒரே நாள் அல்ல!

எல்லா மனிதரும் ஒரே மனிதர் அல்ல!

எல்லாக் காலமும் ஒரே காலம் அல்ல!

ஆயினும்,

எல்லா தெய்வமும் ஒரே தெய்வம் தான்!

நம்பிக்கையுடன் தொழுவோம்! இன்றைய பொழுதே, 
அவன் செயல் என எண்ணி!

Thursday, June 6, 2013

சதுரகிரி யாத்திரை

                                                              


சதுரகிரி ஈசனை வழிபட சதுரகிரி யாத்திரை முதல்முறையாக , மேற்கொள்ளும் சிவ நெறி செல்வர்களையும் செல்ல எண்ணுபவர்களையும்  , யாத்திரை நன்றே நிறைவேற ,ஒரு வினாடி  அன்புடன் வாழ்த்துகிறது!

முதல் முறையாக சதுரகிரி யாத்திரை மேற்கொள்ளும் யாவரும் அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டியது

1. மலை ஏறும் போது, தேவையான உடைகள், அவசர மருந்துகள் மற்றும் பிஸ்கட் அல்லது ஸ்நாக்ஸ் , தண்ணீர் அடங்கிய சிறிய பையை எடுத்துச்செல்லுங்கள்!

2.நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேற,மலையேறும் போது, அமைதியாக , இறை சிந்தனையுடன் ஏறுங்கள்!

3.மழைக் காலங்களில் மலை ஏறும் போது , சற்றே அதிக கவனம் அவசியம் தேவை!

முதல் முறையாக மலை ஏறும் அன்பர்கள்,மலைஏறுதல்,வழிகாட்டி, தங்குமிடம், வாகனநிறுத்தம், பயணத்திட்டம், மலையில் தங்குதல் போன்ற  தங்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் ,சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கவும் தங்களின் சதுரகிரி யாத்திரை நல்ல முறையில் நிறைவேறவும் ஒரு வினாடி  உங்களுக்கு உதவ அன்புடன் காத்திருக்கிறது!

     
முகப்பில்  உள்ள கருத்துப்பெட்டியில் , எமக்கு மின் அஞ்சல் செய்தால் நாம் உடனே தங்களுக்கு  விளக்கமளிக்கிறோம்,நன்றி!


Friday, May 24, 2013                மூலிகை இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரும் கோடை. நம்மில் எத்தனை பேர் அவற்றை முறையாக அறிந்து கொண்டிருக்கிறோம்? கிராமங்களில் சாலையோரம், வயல்வெளிகளில்,ஆற்றுப்படுகைகளில், எத்தனை எத்தனை அருமையான, நம் உடல் நலம் பேணக்கூடிய மூலிகைகள் வளர்ந்து இருக்கின்றன!

         அருமையான ஒரு மூலிகை,குப்பைமேனி எங்கும் காணக் கிடைக்கும்.அந்த மூலிகை மிக அருமையான உடல் நலம் பேணும் மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை.

வெளிப்பூச்சாக சிரங்கு,தேமல் போன்ற தோல் நோய்களுக்கும், உள்ளுக்கு மருந்தாக மிளகு சேர்த்து முழுச் செடியும் நம் உடல் இரத்தத்தை சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக செய்யும்.

இப்படி எத்தனை எத்தனை மகத்துவம் கொண்ட மூலிகைகள் நம் அருகில்.

அறிவோம் மூலிகைகளை! உடல் நலம் காப்போம் , இயற்கை அளித்த பக்க விளைவுகள் இல்லாத வரம் - மூலிகைகள்!

நாம் மூலிகைகள் பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறோம் ஆயினும் நாம் இருக்கும் வாழ்வியல் சூழலில் , மூலிகைகளை தேடிச் செல்ல முடிய வில்லை என்று வருந்துபவர்களுக்கும்  , மூலிகை மூலம் நிவாரணம் தேட எண்ணும் நண்பர்களுக்கும், இத்தளம் தன்னாலான உதவிகள் செய்யும்.


Friday, May 10, 2013

கோடையில் வீட்டில் இருக்க, முடிய வில்லையா?
அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டது, 

வீட்டிலே , இரவு நேரம் சுத்தமாக தூங்க முடிய வில்லை, பகலிலே, கேட்கவே வேண்டாம்!
எல்லோரும் ஏசி வைத்துக்கொள்ள முடியுமா?
அல்லது 
எல்லோரும் தான் குளுகுளு ஊட்டி,கொடைகானல் , 
இல்லை கொல்லி மலை, ஏற்காடு செல்ல முடியுமா?

அந்த சூழலை , குளுமையான , மனதிற்கு இதமான அந்த குளிர் தட்ப நிலையை நாம் இருக்கும் இடத்தில் அனுபவித்தால் , ? 

நினைக்கவே , பரவசம்!
நடந்தால் ?
அற்புதம்!

ஆம், நாம் இருக்கும் இடத்திலேயே  , குளிர் சூழலை உருவாக்குவோம்!
ஏசி இல்லாமலே!

எப்படி?

கொஞ்சம் தண்ணீர் , கொஞ்சம் முயற்சி , அவ்வளவே!
முதலில் , நம் வீட்டு சன்னல்!

வீட்டில் உள்ள பாய் , இல்லை என்றால் படுக்கை விரிப்பு எடுத்து, நன்கு தண்ணீரில் ஊர வைத்து, சன்னலில் கட்டி விடுங்கள்!

தரையில் தண்ணீர் ஊற்றி , சற்று தேங்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்!

மிக மிக கவனம் , தரையில் தண்ணீர் இருக்கும் போது பார்த்து நடக்கவும்!

அதிலும் வயதானவர்கள் இருந்தால், தரையில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்து விட்டு, சன்னலை மட்டும் ஈரத்துணியோ அல்லது பாயோ கொண்டு கட்டவும்!
சன்னல் அவசியம் திறந்திருக்க வேண்டும்!

அப்போதுதான் ,வெளிக்காற்று , உள்ளே நமக்கு குளுமையைத் தரும்!

வீட்டின் மேலே மொட்டை மாடி இருந்தால் , அதிலும் தண்ணீர் தெளிக்க வேண்டும்! மாடியில் தண்ணீர் தெளிக்க , மாலை வேலை உகந்தது !

மற்ற படி, வீட்டில் தண்ணீர் தெளிக்க , சன்னலை ஈரத்துணியால், அடைக்க, காலை வேலை உகந்தது!

தண்ணீர் தெளிக்கும் பொது, வீட்டில் உள்ள FAN ஐ ,ஆப் செய்து விடுங்கள், சற்று நேரம்!

பிறகு , பேன் போட்டுக்கொள்ளலாம்!

இப்போது , உங்கள் இல்லம் , ஏசி இல்லாமலே, குளுகுளு வென இருக்கும்!

வெட்டி வேர் , சந்தனம் போன்றவற்றை சன்னலில் ஈரத்துணியுடன் சேர்த்துக்கட்ட, குளுமையுடன் , மனதிற்குப் புத்துணர்வையும் தரும்!

இந்த கோடையில் , குடிக்கவே தண்ணீர் இல்லை, இதில் அதிக தண்ணீருக்கு எங்கே செல்வது என்று கேட்காதீர்கள், சன்னலுக்காவது, ஈரத்துணியை, பயன்படுத்தி, கோடை வெப்பத்திலிருந்து, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்!

எளிய முறை தானே, செய்து பாருங்கள் ,
பலனைச் சொல்லுங்கள் உங்கள் சுற்றத்தார்க்கு!


Thursday, April 25, 2013

கோடைக்கு இதமாக !

கோடைக்கு இதமாக சில கூல் விசயங்கள்! தினமும் காலையில் நிறைய தண்ணீர் பருகுங்கள்!

முடிந்தால் தினமும் இரு வேளைகள் அல்ல, பல வேளைகள் கூட குளிக்கலாம்!

கீரை வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்!

முடிந்தவரை packed உணவு வகைகளைத் தவிர்க்கலாம்!

மற்றும் A / C வசதியை முடிந்தவரை தவிர்க்கலாம்! , வெளியில் சென்று வந்த நேரத்திலாவது !

இவை எளிமையான  மற்றும் உங்களுக்கு தெரிந்ததுதான்!

எளிமையாக இருப்போம்! கோடையை வெல்வோம்!!  

Monday, April 15, 2013

கோடை வெப்பம்

கோடை வெப்பம்


இன்னும் சில தினங்களில் கோடை வெப்பம் 100 degree தாண்டுமாம், மதுரை,திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட உள் தமிழ்நாட்டில் , வெப்பம் அதன் உச்சம் தொடுமாம்!

இப்போதே இப்படி என்றால் , இனி வரும் நாட்கள்?

அதனால் எல்லோரும் வீட்டிற்குள் இருக்க முடியுமா?

உழைப்பாளிகளின் நிலை என்னாகும்?

நண்பர் ஒருவர் ஒரு விஷயம் அடிக்கடி சொல்வார்!

ஒருவர்  வெயிலில் , அலைய வேண்டும் என்பது விதி [ அவருடைய அலுவல் அப்படி ] என வைத்துக்கொண்டாலும், அதை நம் மதியால் வெல்லலாம்!

எப்படி என்கிறீர்களா?

வெயிலின் வெம்மை கடுமையாக இருந்தாலும்,

நாம் தலைக்கு தொப்பி போட்டுகொள்ளலாம், 
நல்ல காலணி அணிந்து கொள்ளலாம் 
கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கொள்ளலாம் 
கதராடை உடுத்திக்கொள்ளலாம் 
அடிக்கடி தண்ணீர் பருகலாம் 

இதன் மூலமாக , நாம் வெயிலின் கடுமையை, நம் மதியினால் வெல்லலாம் என்றார் நண்பர்!

என்ன சரிதானே ?

நன்றி அன்பர்களே!!Sunday, April 14, 2013

தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !


தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !


உலகெங்கும் தமிழ் கூறும் தமிழ் அன்பர் யாவருக்கும் ,
இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்!

பழந்தமிழர் வாழ்க்கை, வரலாறு,சேவை, அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற, காலத்தால் அழிக்க முடியாத படைப்புகள், வீரம் செறிந்த வாழ்வியல் நெறிகள் இவற்றை வாய்ப்பு கிடைக்கும் போது நாம் நம் சந்ததியர்க்கு , சற்றே எடுத்துரைத்தால் , தமிழன் தன நிலை அறிந்து , எங்கும் பெருமிதத்துடன் வாழ்வான்!

தமிழன் வாழ்வு ஞானக்களஞ்சியம் !

தமிழன் வாழ்வு சரித்திரம்!

தமிழன் வாழ்வு உலக நெறி!

எங்கும் பரப்புவோம் தமிழர் பெருமையை !

வாழ்க தமிழ்!

வளர்க தமிழர் பண்பாடு!

ஓங்குக தமிழன் பெருமை!

Thursday, April 11, 2013

மாற்றமே வருக

மாற்றம் ஒன்றே மாறாதது!
என்றும் நிலையானது!
காலத்தால் அழியாதது!

வரலாற்றுப் பக்கங்கள் சொல்லும் செய்தி என்ன?
 வீழ்ந்தவர் ,வென்றவர் வாழ்க்கை என்ன?
நேற்றைய இன்றைய தேசத்தின் நிலை என்ன?
இத்தனை அரசியல் அலங்கோலங்கள் என்று இருந்தது?
விஞஞான வளர்ச்சியின் உன்மத்தம்
எங்கு கொண்டு போகிறது நம் தேசத்தை?

வருங்காலத்தை ? சந்ததியை?

மீண்டும் ஆரம்பத்தைப் பாருங்கள்,
மாற்றம் ஒன்றே மாறாதது!
மீண்டும் வரும் ஒரு புதிய மாற்றம்!
மாற்றம் தானாக நடப்பது ஒரு இயல்பு
மாற்றம் உண்டாக்குவது மறு இயல்பு

எப்படி இருப்பினும் , மாற்றம் உறுதி என , 
முடிவெடுத்து,
குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தால்?

எதிர்த்து நிற்குமோ , எதுவும் ??
 எதிர்க்க உண்டோ ஏதும் ??

மாற்றமே வருக,
மானிடம் காக்க!

Sunday, April 7, 2013

சதுரகிரி!

விரத நாட்களில்  , சதுரகிரி எங்கும்
பக்தர் வெள்ளம் காணலாம் !
அமாவாசை பௌர்ணமி தினங்களில் , 
அதிக பக்தர் கூடுவர் !
உண்ண உணவு ? 
நல்லோர் நடத்திடும் அன்ன சத்திரங்கள் ,
எந்நேரமும் பக்தர் வயிறு பசி போக்கிடும்!
பக்தர் தங்க இடம்?
காலைக்கடன்,குளியல் வசதி?
இதற்கும் , சேவை மனப்பான்மையுள்ள 
நல்லோர் தேவையா? 
பக்தர் , மகளிர் வாட்டம் போக்கிட!

சுந்தர மகாலிங்கமே போற்றி!
சந்தன மகாலிங்கமே போற்றி!
பக்தர் நலம் காப்பாய் போற்றி! போற்றி!!


எல்லோருக்கும்!


எல்லோருக்கும்!


வாழும் வாழ்க்கை பயனுற வாழ,
ஒரு முறை நினைப்போம் யாவரையும்!
பணம் புகழில் மேலோரையும்!
பண்பு குண நலனில் மிக்கோரையும்!

ஈன குண நலன் உள்ளோர்,
வஞ்சகர்,கயவர்,கள்வர்,
யாவருக்கும் பொதுவாய்
ஒரு பிறப்பு, ஒரே இறப்பு!
இடையில் ஏன் மாறின பாதைகள்?!

யாருக்கும் இங்கே அச்சமில்லை,
எதற்கும் இங்கே கூச்சமில்லை!
சுய நலத்திற்காக, எதையும் செய்யும் கூட்டம்!

எங்கே இறை?! எங்கே மானிடம்?!

எங்கே முடியும் இந்த ஓட்டம் ?
மானிடம் மறந்த மிருக ஓட்டம் !

சிந்திப்போம் ஒரு வினாடி!

இனியேனும் வாழ்வோம் மானிடர்களாக!
நாளைய சந்ததி நலமாக வாழ..


மட்டும் அல்ல ;

மானிடம் என்பது மனிதப் பண்பு என காட்ட!

மாறும் உலகில் மாறாத ஒன்று மனிதமே என உணர்த்த!!


Sunday, March 24, 2013

வணக்கம் தமிழகம்!


தமிழர் வாழ்வும் தமிழர் உறவும் செழிக்க,

நல் வாழ்த்துக்கள்!

Thursday, March 21, 2013

தமிழன்தமிழா!

எங்கே , போகிறது, இந்திய அரசியல் களம்?
அதிரடி மாற்றங்கள் , அடுத்தடுத்து, தமிழக அரசியல் களத்தில்!
எங்கே போயின, ஈழத்தமிழர் பாதுகாப்பு கேடயங்கள்?
என்ன நடக்கிறது , ஜெனிவாவில்?
ஓ! நாம் தமிழ்நாட்டு , தமிழர்களா?
நாம் பிரிந்தே போராடுவோமா , மீனவர் பிரச்னை முதல்,
மாணவர் பிரச்னை வரை !

தமிழன் என்றொரு , இனம் உண்டு!
அவன் உலகை ஆண்டது , அந்த காலம்!
அவனை அவன் ஆண்ட,
லங்கா தேசம்  , ஆள்வது, இந்தக் காலம்!
அவன் தனித்தனியே, பிரிந்து கிடக்கின்றான் இன்று!
அவனிடம் எல்லாம் உண்டு , இல்லாதது, ஒற்றுமை!
அதனால் தான், தமிழன் , தேசம் வாரியாக
சாதி வாரியாக, அரசியல் வாரியாக, பிரிந்து கிடக்கின்றான்!
தமிழகத்திலோ , இன்னும் உச்சம்!
ஆயிரம் பெரியார் வந்தாலும் , ஒழிக்க முடியா துயரம், 
தமிழன் ஒடுக்கப்படுவது! ஒழிக்கப்படுவது!
எங்கே போனது , உலகை ஆண்ட வீரம்?

வாழ்க! தமிழர் ஒற்றுமை!

வளர்க ! தமிழர்  உலகம்!

Wednesday, March 20, 2013

வணக்கம்!


தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு, 

இனி வரும் காலம் சிறப்பாக அமைய,

நல வாழ்த்துக்கள்!Wednesday, March 13, 2013

சதுரகிரி யாத்திரை!

சதுரகிரி யாத்திரை!


சதுரகிரி மலை ஏறும் 
அன்பு உள்ளங்களே,
வழி கொடுங்கள் , 
மலை ஏறுவோருக்கு!

பாதையை அடைத்துக்கொண்டு,
நடக்க வேண்டாம்,
நாம் மட்டும் மலைக்கு
வரவில்லை!
மலை ஏறும்போதும்,
இறங்கும் போதும்,
இறை உணர்வாளர்களின்,
அன்பர்களின்,
மனதை வருத்தும்.,

நடையாளர்களின் அலைஇல்லா 
பேசிகளினால்  ,
3ம் தர திரைஇசை
வழியெங்கும்!

[ பாடல்கள் எனக் கூற
இயலாத வண்ணம்,
மிகை இசைக்கலவை]

இன்னும் பிற..!
யோசிப்போம்! 
சமத்துவம் பேணுவோம்!

அனைவரின் சதுரகிரி யாத்திரை ,
நலமுடன் அமைய, 
நாமும் நம் பங்களிப்பை , 
இயன்ற அளவு அளிப்போம்!
ஆன்ம நலம் பெருக்குவோம்!

சதுரகிரி நாடும் யாவருக்கும் ,
எப்போதும் அன்னமிடும்
கஞ்சி மடம்
போல இல்லாவிடினும் !

நம்மால் இயன்ற அளவு !!


Wednesday, March 6, 2013

ஒரு விநாடி யோசித்திருந்தால்,  ?

நிறைய நிகழ்வுகள், நலமாக,

 அமைந்திருக்கும்!

யோசிப்போம் ஒரு விநாடி, ஒரே ஒரு விநாடி!


வாழ்க! வாழுங்காலம் நலமாக!!திரு அண்ணாமலை!


திரு அண்ணாமலை!

நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலையை , நினைத்த மாத்திரத்தில் தரிசித்தால்,எவ்வளவு மன நிறைவு!


இனி , திரு அண்ணாமலையாரை , ஒரு விநாடி நேரத்தில் தரிசிக்கலாம்!

 திரு அண்ணாமலை இணைய தளம் வாயிலாக!

திரு அண்ணாமலை நேரடி மலைக்காட்சி!

அருணாச்சலா இணையதளத்தின்,
ஈடிலா, இச்சேவை.,போற்றுதலுக்குரியது!

Tuesday, March 5, 2013

1900 களின் சமய,கலை,சமூக ,  இலக்கியவாதிகளின்
 அனைத்துப் படைப்புகளையும் ஒருங்கே,
 மின் நூல் வாயிலாக, நாம் படித்து மகிழ , ஒரு அரிய தளம்!


1900 களின் எழுத்து வேந்தர்களின் படைப்புகள்!


தமிழ் மொழியின் பாரம்பரிய தொன்மையை , பழமையைப்  போற்றிப்  பாதுகாக்கும் , உன்னத இணைய தளம்!


தமிழில் இணையம் வழியாக பட்டம் பெற , இந்த இணைய தளம் !

தமிழ் இணையப் பல்கலைக் கழகம்!

Monday, March 4, 2013
சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவ ஆர்வம் உள்ளவர்களுக்கு ;
இணையத்தில் தேட!ஆன்மிக தேடல் மற்றும் சித்த மூலிகை ஆர்வமுள்ளவர்களுக்கு மிகப்பயனுள்ள ஒரு வலைத்தளம்.
Saturday, March 2, 2013

மூலிகை - சாப நிவர்த்தி

 மூலிகை - சாப நிவர்த்தி 


சித்தர்கள் சொல்லிய வைத்திய முறைகளில், மனிதர்களுக்கு நோய் குணமாக , அவர்தம் உடல் நலம் சீராக, குறிப்பிட்ட மூலிகைச் செடிகளை 
சாப நிவர்த்தி எனும் குறிப்பிட்ட மந்திரம் உச்சரித்து மற்றும் தனிப்பட்ட வழிமுறைகளின் மூலம்  எடுத்து , குறிப்பிட்ட பக்குவத்தில் கொடுத்து வர , நோய் நீங்கி மனிதன் நெடு நாள் சிறப்பாக வாழ்வானாம்!

மனிதர்க்கும் உண்டா சாப  நிவர்த்தி?     

நம்மை வழி நடத்தும் சித்தர்கள் பல முறைகளில் சிறப்பாக, மனிதர்களின் சாப நிவர்த்தி பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். 

அவற்றில் எல்லாம் தலையாய அறிவுரையாக, தேர்ந்த குருவின் அருளால் மட்டுமே , அதை அடைய முடியும் என்ற குறிப்புகளைக்  காண முடிகிறது.

தேர்ந்த குருவினை அடைந்து, அவரின் அருளாசியைப் பெற்று, அதன் மூலம் சாப நிவர்த்தி பெறலாம்.

இக்காலத்தில் அது கடினம் என எண்ணினால் , தங்கள் செயல்களில், எண்ணங்களில்,சிந்தனைகளில்  மற்றும் பேச்சுகளில், மற்றவர்க்கு நன்மை செய்யாவிடினும், பொல்லாங்கு மற்றும் தீங்கு நினையாமல் இறை சிந்தனையில் இருந்தாலே, நாம் சாப நிவர்த்தி பெற்று அடையும் நற்பலன்களையெல்லாம்,  இந்த நல்ல எண்ணத்திலான, செயல்களினால் அடைந்து, பெருவாழ்வு வாழலாமாம்!

வணக்கம்!

ஞானக்குமாரன்.


Wednesday, February 27, 2013


பயணம்!


கனவுகளே சிறகுகளாக , 
நாளைய விடியலை நோக்கி நம் பயணம்!
நேற்றைய தோல்விகளுக்கு விடை கொடுக்க ,
புதிய முயற்சி தொடர,
நாம் எழுவோம் உறக்கத்திலிருந்து !

அறியாமை இருள் அகன்று ,
ஆன்ம ஒளி யாவரும் பெற,
 நம் பயணம் தொடரட்டும்!

-ஞானகுமாரன்.


சதுரகிரி

சதுரகிரி  யாத்திரை!

மூலிகைக் காடு, சித்தர்கள் வாழும் மலை, மலை மேல் சிவன் மகாலிங்கமாய்! அரிய பயணம்!

சமத்துவம் பேணும் ஒரே இடம், மலை மேல் தங்க இடம் , உண்ண உணவு அனைவருக்கும் ஒரே வகை!

அமைதியைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம் , சதுரகிரி வாருங்கள், வாய்ப்பிருந்தால் சில நாட்கள் தங்கலாம், மனம் இலகுவாகும்.

இயற்கையை உணருங்கள்! இறையனுபவம் நிறைவாகும்!கொஞ்சம் கவிதை!


வெற்றியை வென்றிடு!
நினைத்துப் பார்த்தால், களைத்துப் போவாய்!

நேற்றைய வருடங்களை!, நேற்றைய வடுக்களை!!

காலம் ஒரு மாயச்சுழல், இளைத்தவனை தூக்கி வீசும் !

எதிர்த்துப் போராடுபவனை, அரவணைத்துக்கொள்ளும்!

புரிந்து கொள் !

நேற்றைய தோல்விகளே , இன்றைய வெற்றிக்கு அடித்தளம்!

முயற்சி தான் வாழ்க்கை, மீண்டும் மீண்டும் விழுந்தாலும்,

வீரியமாய் எழு!  வீறு கொண்டு போரிடு! தைரியமாக எதிர்த்து நில்! 

கொண்ட கொள்கை தான், இலட்சியம்!

இலட்சியத்தில் உறுதிகொண்டு, வெற்றியை வென்றிடு!


துணிவுடன் வாழ்ந்திடு!, என்றும் உலகம் நமக்கே என்று ! - ஞானகுமாரன்.New Posts will be in your mail!

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews