வெற்றியை வென்றிடு!
நினைத்துப் பார்த்தால், களைத்துப் போவாய்!
நேற்றைய வருடங்களை!, நேற்றைய வடுக்களை!!
காலம் ஒரு மாயச்சுழல், இளைத்தவனை தூக்கி வீசும் !
எதிர்த்துப் போராடுபவனை, அரவணைத்துக்கொள்ளும்!
புரிந்து கொள் !
நேற்றைய தோல்விகளே , இன்றைய வெற்றிக்கு அடித்தளம்!
முயற்சி தான் வாழ்க்கை, மீண்டும் மீண்டும் விழுந்தாலும்,
வீரியமாய் எழு! வீறு கொண்டு போரிடு! தைரியமாக எதிர்த்து நில்!
கொண்ட கொள்கை தான், இலட்சியம்!
இலட்சியத்தில் உறுதிகொண்டு, வெற்றியை வென்றிடு!
துணிவுடன் வாழ்ந்திடு!, என்றும் உலகம் நமக்கே என்று !
- ஞானகுமாரன்.
No comments:
Post a Comment