Saturday, October 24, 2020

முருங்கை தரும் நன்மைகள்

 

 உடல்நலம் காத்து 

நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் 

மூலிகை முருங்கை எண்ணை.


இயற்கையில் மனிதர் அறியாத ஏராளமான அதிசயங்கள், உடல்நலம் காக்கும் எளிய மூலிகைகளாக, சாதாரண மரங்களாக நம்மருகிலேயே இருக்கின்றன. அவசர வாழ்வில் பலரும் அலட்சியமாக கடந்துசெல்லும் அத்தகைய ஒரு சாதாரண மரம் தான், முருங்கை. 

நமக்கு அது தரும் அற்புத நன்மைகளை அறிந்தால், நாம் அவற்றை அதிசய மரம் என்போம். முருங்கையின் எல்லா பாகமும் மனிதர்க்கு உடல்நலமும், மனநலமும் தந்து அவற்றை ஆற்றலுடன் செயல்படவைப்பதால், வெளிநாட்டினர் முருங்கையை, "அதிசய மரம்" [MIRACLE TREE ] என்கின்றனர். 

வைட்டமின்-C மற்றும் அரிய தாதுச்சத்துக்கள் நிறைந்த முருங்கை உணவை, உலகளாவிய "சிறந்த உணவு" [SUPER FOOD] என்கின்றனர். 

முருங்கையைப் பற்றிய நம் முன்னோர் வாக்கு, 

"முன்னூறு வியாதிகளைப் போக்கும் முருங்கை" 

வீடியோ பதிவைக்காண ...

க்ளிக் செய்யுங்கள்..!  


முருங்கையை கீரை அல்லது காயாக நாம் சமையலில் அடிக்கடி உபயோகித்து வந்தாலும், கீரையை காயவைத்து பொடியாகவும், முருங்கைக்காய் விதைகளை பதப்படுத்தி, அதிலிருந்து எண்ணையாகவும் மதிப்புகூட்டிய வகையில் பயன்படுத்தும்போது, முருங்கையின் ஆற்றல் முழுமையாக நமக்கு கிடைக்கிறது என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். 

இதுவரை நம்மில் பெரும்பாலோர் அறியாத, ஆனால் நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உடல்நலத்தை காக்க பயன்படுத்திய ஒன்றுதான், முருங்கை எண்ணை. 

முருங்கை எண்ணை தரும் நற்பலன்கள். 

உடல் நலனை பாதிக்கும் நோய்த்தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

உடலின் நச்சுக்களை நீக்கி, மலச்சிக்கலை போக்கி, நீண்டகால உடல்நல பாதிப்புகளை சரிசெய்யும் ஆற்றல்மிக்கது. 

முருங்கை எண்ணையின் சத்துக்கள், இரத்த நாள பாதிப்புகளை சரிசெய்து, கொலஸ்ட்ரால், இதய பாதிப்புகள் மற்றும் இரத்த அழுத்த குறைபாடுகளை போக்கும். 

சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும், 

உடல் உள் உறுப்புகளின் இயக்கத்தை சீராக்கும். 

இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தசர்க்கரை அளவை முறைப்படுத்தி, உடல்நல பாதிப்புகளை கட்டுப்படுத்தும். 

ஜுரம், ஜலதோஷம், இருமல் தொண்டைவலி பாதிப்புகளை குணமாக்கும். 

இரத்த சோகையை போக்கி, உடலை வலுவாக்கும். 

செரிமான சக்தியை அதிகரித்து, உடல்நலம் காக்கும். 

கண்பார்வை பாதிப்புகளை சரிசெய்து, சீரான பார்வைத்திறனை மேம்படுத்தும் ஆற்றல்மிக்கது. 

கண்களின் கீழ் ஏற்படும் கருவளையம், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கி, முகத்தைப் பொலிவாக்கும். 

வயிற்றுப்புண் மற்றும் உதடு வெடிப்பு பாதிப்பை சரிசெய்யும். 

வயது முதிர்ந்தோர்க்கு ஏற்படும் கைகால் மூட்டுவலி, இடுப்பு வலி போன்ற வலிகளுக்கு.சிறந்த வலி நிவாரணி. 

தசைப்பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றுக்கு உடனடி நிவாரணம் தரும். 

பல் ஈறு வலி மற்றும் பல் பாதிப்புகளை குணமாக்கும். 

எலும்புகளை வலுவாக்கி, உடலை உறுதியாக்கும். 

தலைவலிகளை போக்கும் சிறந்த ஆற்றல்மிக்கது. 

இளம் வயதினருக்கு மன உளைச்சல் தரும் தலைமுடி உதிர்தல், தலைமுடி சில இடங்களில் வளராமை, இளநரை போன்ற பாதிப்புகளை சரிசெய்து, மன அமைதி அளிக்கும். 

பொடுகுத் தொல்லையைப் போக்கி, தலைமுடியைப் பொலிவாக்கும். 

இளைய வயதினருக்கு மன உளைச்சல் தரும் மற்றொரு பாதிப்பு, முகப்பரு. முருங்கை எண்ணை, முகப்பரு மற்றும் முகக்கருமை பாதிப்புகளை போக்கி, முகத்தைப் புத்துணர்வாக்கும். 

முகம் மற்றும் தோலில் உள்ள சுருக்கங்களை அகற்றி, பொலிவாக்கும். 

பிரசவமான சில பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் பிரசவ தழும்புகள் மற்றும் உடலில் காயங்களால் ஏற்படும் தழும்புகளைப் போக்கும். 

பல்வேறு சரும நோய்கள் மற்றும் பாதிப்புகளை போக்கி, சருமத்தை காக்கும் ஆற்றல்மிக்கது. 

நரம்பு தளர்ச்சி மற்றும் நரம்பு முடிச்சினால் ஏற்படும் பாதிப்புகளைப்   போக்கி, நரம்புகளை வலுவாக்கும். 

வீக்கங்கள், புண்கள் மற்றும் பூச்சுக்கடி பாதிப்புகளை விரைவாக குணமாக்கும் தன்மைமிக்கது. 

பாத வெடிப்பு பாதிப்புகளை போக்கி, பாதத்தை மென்மையாக்கும். 

தினமும் இரவில் சில துளிகள் முருங்கை எண்ணையை உச்சந்தலையில் தேய்த்துவர, தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு அமைதியான உறக்கம் கிடைக்கும். அத்துடன் மூளை ஆற்றல் மேம்பட்டு, சிந்தனை மற்றும் செயல்களில் ஆற்றல் மேம்படும். 

சமையலில் பொறிக்க, வறுக்க பயன்படுத்தலாம், அதிக வெப்பநிலையிலும் தன்மை மாறாது, சாப்பாட்டிலும் சேர்த்துக்கொள்ளலாம். 

அனைத்து வயதினரும் குறிப்பிட்ட அளவு உட்கொள்ளவும், பாதிப்புள்ள இடங்களில் மென்மையாக தேய்த்தும் வரலாம். 

மனச்சோர்வு, மன உளைச்சல் போன்ற மனநல பாதிப்புகளை சரியாக்கி, புத்துணர்ச்சியும் உற்சாகமும் தரவல்லது. 

பக்கவிளைவுகள் எதுவும் இல்லாதது. 


மேலே சொன்ன நன்மைகளைவிட, 

சொல்லாத நன்மைகள் ஏராளம் கொண்டது, 

முருங்கை எண்ணை. 


முருங்கை எண்ணையைப் போல, முருங்கை இலைப்பொடி அல்லது முருங்கை இலை கேப்சூலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, உடல் நலனைப் பாதுகாக்கும் தன்மைகொண்டது. 

முருங்கை இலை தேநீர் பருகிவர, நன்மைகள் கிடைக்கும். 

முருங்கைப்பூ, முருங்கை பிசின் மற்றும் முருங்கை வேர் போன்ற முருங்கையின் மற்ற அனைத்து பாகங்களும், மக்களுக்கு நன்மைகள் தரவல்லவை. 

பல நாடுகளில் முருங்கை விதைகளை மாசுபட்ட நீரை சுத்திகரித்து குடிநீராக்க, உபயோகிக்கிறார்கள். 

Total Pageviews