Thursday, April 25, 2013

கோடைக்கு இதமாக !

கோடைக்கு இதமாக சில கூல் விசயங்கள்! தினமும் காலையில் நிறைய தண்ணீர் பருகுங்கள்!

முடிந்தால் தினமும் இரு வேளைகள் அல்ல, பல வேளைகள் கூட குளிக்கலாம்!

கீரை வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்!

முடிந்தவரை packed உணவு வகைகளைத் தவிர்க்கலாம்!

மற்றும் A / C வசதியை முடிந்தவரை தவிர்க்கலாம்! , வெளியில் சென்று வந்த நேரத்திலாவது !

இவை எளிமையான  மற்றும் உங்களுக்கு தெரிந்ததுதான்!

எளிமையாக இருப்போம்! கோடையை வெல்வோம்!!  

Monday, April 15, 2013

கோடை வெப்பம்

கோடை வெப்பம்


இன்னும் சில தினங்களில் கோடை வெப்பம் 100 degree தாண்டுமாம், மதுரை,திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட உள் தமிழ்நாட்டில் , வெப்பம் அதன் உச்சம் தொடுமாம்!

இப்போதே இப்படி என்றால் , இனி வரும் நாட்கள்?

அதனால் எல்லோரும் வீட்டிற்குள் இருக்க முடியுமா?

உழைப்பாளிகளின் நிலை என்னாகும்?

நண்பர் ஒருவர் ஒரு விஷயம் அடிக்கடி சொல்வார்!

ஒருவர்  வெயிலில் , அலைய வேண்டும் என்பது விதி [ அவருடைய அலுவல் அப்படி ] என வைத்துக்கொண்டாலும், அதை நம் மதியால் வெல்லலாம்!

எப்படி என்கிறீர்களா?

வெயிலின் வெம்மை கடுமையாக இருந்தாலும்,

நாம் தலைக்கு தொப்பி போட்டுகொள்ளலாம், 
நல்ல காலணி அணிந்து கொள்ளலாம் 
கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கொள்ளலாம் 
கதராடை உடுத்திக்கொள்ளலாம் 
அடிக்கடி தண்ணீர் பருகலாம் 

இதன் மூலமாக , நாம் வெயிலின் கடுமையை, நம் மதியினால் வெல்லலாம் என்றார் நண்பர்!

என்ன சரிதானே ?

நன்றி அன்பர்களே!!Sunday, April 14, 2013

தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !


தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !


உலகெங்கும் தமிழ் கூறும் தமிழ் அன்பர் யாவருக்கும் ,
இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்!

பழந்தமிழர் வாழ்க்கை, வரலாறு,சேவை, அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற, காலத்தால் அழிக்க முடியாத படைப்புகள், வீரம் செறிந்த வாழ்வியல் நெறிகள் இவற்றை வாய்ப்பு கிடைக்கும் போது நாம் நம் சந்ததியர்க்கு , சற்றே எடுத்துரைத்தால் , தமிழன் தன நிலை அறிந்து , எங்கும் பெருமிதத்துடன் வாழ்வான்!

தமிழன் வாழ்வு ஞானக்களஞ்சியம் !

தமிழன் வாழ்வு சரித்திரம்!

தமிழன் வாழ்வு உலக நெறி!

எங்கும் பரப்புவோம் தமிழர் பெருமையை !

வாழ்க தமிழ்!

வளர்க தமிழர் பண்பாடு!

ஓங்குக தமிழன் பெருமை!

Thursday, April 11, 2013

மாற்றமே வருக

மாற்றம் ஒன்றே மாறாதது!
என்றும் நிலையானது!
காலத்தால் அழியாதது!

வரலாற்றுப் பக்கங்கள் சொல்லும் செய்தி என்ன?
 வீழ்ந்தவர் ,வென்றவர் வாழ்க்கை என்ன?
நேற்றைய இன்றைய தேசத்தின் நிலை என்ன?
இத்தனை அரசியல் அலங்கோலங்கள் என்று இருந்தது?
விஞஞான வளர்ச்சியின் உன்மத்தம்
எங்கு கொண்டு போகிறது நம் தேசத்தை?

வருங்காலத்தை ? சந்ததியை?

மீண்டும் ஆரம்பத்தைப் பாருங்கள்,
மாற்றம் ஒன்றே மாறாதது!
மீண்டும் வரும் ஒரு புதிய மாற்றம்!
மாற்றம் தானாக நடப்பது ஒரு இயல்பு
மாற்றம் உண்டாக்குவது மறு இயல்பு

எப்படி இருப்பினும் , மாற்றம் உறுதி என , 
முடிவெடுத்து,
குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தால்?

எதிர்த்து நிற்குமோ , எதுவும் ??
 எதிர்க்க உண்டோ ஏதும் ??

மாற்றமே வருக,
மானிடம் காக்க!

Sunday, April 7, 2013

சதுரகிரி!

விரத நாட்களில்  , சதுரகிரி எங்கும்
பக்தர் வெள்ளம் காணலாம் !
அமாவாசை பௌர்ணமி தினங்களில் , 
அதிக பக்தர் கூடுவர் !
உண்ண உணவு ? 
நல்லோர் நடத்திடும் அன்ன சத்திரங்கள் ,
எந்நேரமும் பக்தர் வயிறு பசி போக்கிடும்!
பக்தர் தங்க இடம்?
காலைக்கடன்,குளியல் வசதி?
இதற்கும் , சேவை மனப்பான்மையுள்ள 
நல்லோர் தேவையா? 
பக்தர் , மகளிர் வாட்டம் போக்கிட!

சுந்தர மகாலிங்கமே போற்றி!
சந்தன மகாலிங்கமே போற்றி!
பக்தர் நலம் காப்பாய் போற்றி! போற்றி!!


எல்லோருக்கும்!


எல்லோருக்கும்!


வாழும் வாழ்க்கை பயனுற வாழ,
ஒரு முறை நினைப்போம் யாவரையும்!
பணம் புகழில் மேலோரையும்!
பண்பு குண நலனில் மிக்கோரையும்!

ஈன குண நலன் உள்ளோர்,
வஞ்சகர்,கயவர்,கள்வர்,
யாவருக்கும் பொதுவாய்
ஒரு பிறப்பு, ஒரே இறப்பு!
இடையில் ஏன் மாறின பாதைகள்?!

யாருக்கும் இங்கே அச்சமில்லை,
எதற்கும் இங்கே கூச்சமில்லை!
சுய நலத்திற்காக, எதையும் செய்யும் கூட்டம்!

எங்கே இறை?! எங்கே மானிடம்?!

எங்கே முடியும் இந்த ஓட்டம் ?
மானிடம் மறந்த மிருக ஓட்டம் !

சிந்திப்போம் ஒரு வினாடி!

இனியேனும் வாழ்வோம் மானிடர்களாக!
நாளைய சந்ததி நலமாக வாழ..


மட்டும் அல்ல ;

மானிடம் என்பது மனிதப் பண்பு என காட்ட!

மாறும் உலகில் மாறாத ஒன்று மனிதமே என உணர்த்த!!


New Posts will be in your mail!

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews