எல்லோருக்கும்!
வாழும் வாழ்க்கை பயனுற வாழ,
ஒரு முறை நினைப்போம் யாவரையும்!
பணம் புகழில் மேலோரையும்!
பண்பு குண நலனில் மிக்கோரையும்!
ஈன குண நலன் உள்ளோர்,
வஞ்சகர்,கயவர்,கள்வர்,
யாவருக்கும் பொதுவாய்
ஒரு பிறப்பு, ஒரே இறப்பு!
இடையில் ஏன் மாறின பாதைகள்?!
யாருக்கும் இங்கே அச்சமில்லை,
எதற்கும் இங்கே கூச்சமில்லை!
சுய நலத்திற்காக, எதையும் செய்யும் கூட்டம்!
எங்கே இறை?! எங்கே மானிடம்?!
எங்கே முடியும் இந்த ஓட்டம் ?
மானிடம் மறந்த மிருக ஓட்டம் !
சிந்திப்போம் ஒரு வினாடி!
இனியேனும் வாழ்வோம் மானிடர்களாக!
நாளைய சந்ததி நலமாக வாழ..
மட்டும் அல்ல ;
மானிடம் என்பது மனிதப் பண்பு என காட்ட!
மாறும் உலகில் மாறாத ஒன்று மனிதமே என உணர்த்த!!
No comments:
Post a Comment