Tuesday, December 23, 2014

ஆங்கிலேய புத்தாண்டு தினம் தான் , நம்மை நாம் மாற்றும் தினமா?

வணக்கம் !

தொன்மையான பழந்தமிழர் மரபில் நாம் வாழ்ந்தாலும், வழி நடந்தாலும் ,அல்லாவிடினும், நமது வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் ஆங்கிலேயர் வழி வந்த கிருத்துவ வருட கணக்கில் தான் கடைபிடிக்கப்படுகிறது, அத்தகைய நடைமுறைகளின் ஒரு அங்கமாக இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது.

ஆண்டுகள் எதனடிப்படையின் கீழ் கணக்கிட்டாலும், அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் ஒன்றுதான், நம்முடைய வயதுகளின், சூழ்நிலைகளின்   அடிப்படையில் அதன் கொண்டாட்டங்கள் அமைந்தாலும், நாம் நம்முடைய சில விடநினைக்கும் அல்லது ஆரம்பிக்க நினைக்கும்  விசயங்களை , ஒரு உத்வேகத்துடன் அந்த எண்ணத்தினை நடைமுறைப்படுத்த தேர்ந்தெடுக்கும் நாள் தான் இந்த ஆங்கிலேய  புத்தாண்டு தினம். 

இந்த வருடக்கடைசியில் அத்தகைய விசயங்களில் அதிகம் ஈடுபட்டுக்கொண்டு , நான் இதிலிருந்து  புத்தாண்டு தினம் முதல் விடுபட்டுவிடுவேன் என சமாதானம் கூறிக்கொண்டு விட நினைக்கும் செயல்களில் அதிகம் ஈடுபடுவோர் ஏராளம்.

நாம் நம்முடைய பழம்பெருமை நினைத்து போற்றி, விட்டு விடுதலையாகும் மனமிருந்தால் எத்தகைய அல்செயல்களிருந்தும் எப்போது வேண்டுமானாலும்  விடுபடலாம், நலமுடன் வாழலாம்!

அல்லது ஆரம்பிக்க நினைக்கும் விசயங்களை, நினைத்த அன்றே  ஆரம்பிக்கலாம் அல்லவா?

ஆங்கிலேய புத்தாண்டு தினம் தான் , 
நம்மை 
நாம் மாற்றும் தினமா?

முடிவெடுத்த கணமே, 
நமக்கு 
புத்தாண்டு தானே! 

சிந்திப்போம்! 
பழமை போற்றுவோம்!! 
பாரம்பரியம் காப்போம்!!!

அன்பன்,

ஞானகுமாரன்.


*** கடந்த  ஆண்டு வெளியீட்டின் மறு பதிப்பு!

Thursday, December 11, 2014

மகாகவி

இன்று முண்டாசுக்கவிஞனின் பிறந்த நாள்!


தரணியெங்கும் தமிழர்க்கெல்லாம் தனிப்பெரும் அடையாளமாகத்திகழும், எம் மகாகவியின் பிறந்த நாள்!

தமிழ்தேசம் ஆண்ட மூவேந்தர் போல வாழும் காலத்தில் பெரும்பெயருடனும் வளமுடனும் பொருளுடனும் வாழவில்லை! ஆயினும், 
எம் தமிழ் மக்களுக்கு அஞ்சாமை தந்தான்! 
பரங்கியருக்கு அடிபணியா வீரம் தந்தான்! 
சுதந்திர வேட்கை கொண்ட எம்தமிழருக்கு தமிழ்வேள்வி படைத்தான்! தனியனாய் போராடினான்! தமிழ் கொண்டே! 
சமூக நீதிக்காகவும்! தமிழர் தலை நிமிர்ந்து வாழவும்!
சரித்திரமாய் வாழ்கிறான்! 
தமிழ் உள்ளவரை நின் புகழ் உலகாளும் அய்யா! 
சாதிய சமூக விலங்கு அறுத்த தமிழ் சீராளியே!
வணங்குகிறோம் உம்மை! 
வாழிய வாழியவே!!


தேடி சோறு நிதம் தின்று 
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி 
மனம் வாடி துன்பம் மிக உழன்று 
பிறர் வாட பல  செயல்கள் செய்து 
நரை கூடி கிழப்பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும் 
பல வேடிக்கை மனிதரைப்போலே 
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

மகாகவி.சுப்ரமணிய பாரதியார்.


Tuesday, November 4, 2014

ஒரு வினாடி


வருக! வருக!!

ஒரு வினாடி ப்ளாக் தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!

இத்தளத்தை காண வந்திருக்கும் தங்களுக்கு இந்நாள் , இப்பொழுது , இனிய வேளையாக அமைய எமது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

பதிவுகளைப் பாருங்கள்! நிறைவிருந்தால், நண்பர்களிடம் பகிருங்கள்!

அல்லாவிடில், எம்மிடம் உரையுங்கள்!

உங்களின் கருத்துரைகளே எமக்கு ஊக்கம்! உத்வேகம்!

வாழ்க நலமுடன்!


என்றும் மாறா பேரன்பில்,

ஞானா.

Tuesday, October 21, 2014

தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஒரு வினாடி ப்ளாக் தள ஆதரவாளர்கள் மற்றும் அன்பர் அனைவருக்கும் 

இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்! 
ஒரு வினாடி ப்ளாக் தள ஆதரவாளர்கள் மற்றும் அன்பர் அனைவருக்கும் 

இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

Wednesday, October 1, 2014

கூந்தலூர் முருகன் கோவில்

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோயில்


[ முருகன் ஸ்தலம் ]


கூந்தலூர் முருகன் கோவில் 

திண்டீச்சரங் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர்
 சிரபுரஞசிற்றேமம் சேறை கொண்டீச்சரங் கூந்தலூர் 
கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
  அண்டர் தொழும் அதிரை வீரட்டானம் ஐயாறு சோகந்தி 
ஆமாத்தூருங் கண்டியூர் வீரட்டங் கருகா வூருங் 
                                 கயிலாய நாதனையே காணலாமே.                                     

                                                                                                              -  அப்பர் - 6 - 70 - 9


1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த இச்சிவத்தலம், திருநாவுக்கரசரால்தேவாரப்பாடல் பெற்றதும் அருணகிரி நாதரால் திருப்புகழும் பாடப்பெற்ற சிறப்புவாய்ந்த திருத்தலமாகும். 

அரசலாறு நதி தந்த வளமும், கால வெள்ளத்தில் மூழ்கிடாமல், இன்னும் உயிர்ப்பாக , தன்னுள்ளே கிராமிய தன்மைகளை,  காத்து நிற்கும் கூந்தலார் எனும் பெயர்கொண்ட இந்தச்  சிற்றூர்,  குடந்தை - நாச்சியார்கோயில் - பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ளது.திருக்கோவில் இணையதளம் : koonthalurmurugantemple.org

திருக்கோவில் ப்ளாக் : koonthalurmurugantemple.blogspot.com

திருக்கோவில் ஈமெயில் : koonthalurmurugantemple@gmail.com

ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

Wednesday, September 10, 2014

அன்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி!

விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை அன்புடன் 
வரவேற்கக்காத்திருக்கிறேன்!

நன்றி!

Sunday, September 7, 2014

அன்பு வாசகர் அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை நல் வாழ்த்துக்கள்!

பண்டிகைகள் நாம் கொண்டாடினாலும், கொண்டாடாவிட்டாலும், 

பண்டிகைகள் தரும் ஆனந்தமும்,கொண்டாட்டமும் எல்லாருக்கும் பொதுவே!

இந்த தேசத்தின் நதிகளைப்போல்! 

சமூக நல்லிணக்கம் போற்றுவோம்! மனிதம் நேசிப்போம்!!
Friday, August 29, 2014

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்!


Monday, August 18, 2014

அன்பு இணைய வாசகர் அனைவருக்கும் வணக்கம்!

வாழ்த்துக்கள்!!

பதிவுகளை வாசியுங்கள்!

சக மனிதர்களை நேசியுங்கள்!  

மனித நேயம் ஒன்றே நம்மை

உலக  அல்லல்களிளிருந்து

விடுவித்து அமைதி தரும் மாமருந்து!


 அன்புடன்,

ஞானா.

       


 

Friday, August 15, 2014தன்னலம் கருதா தேசத்தியாகிகளின் அர்ப்பணிப்பால், 
பெற்ற சுதந்திரம் பேணிக்காப்போம்!

சுதேசியாய் வாழ்வோம்!

இந்தியராய் பெருமிதம் கொள்வோம்!

நாளைய உலகம் நம் கையில்!


சகல விதத்திலும் வல்லரசு தேசத்தை விரைவில் உருவாக்க நம்பிக்கையுடன் நாம் முயல்வோம், நம்மளவில்! 

கோடிகளும்,இலட்சங்களும் ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன!


ஒரு முயற்சி ! திரு முயற்சியாகட்டும்!! 

வாழிய தாய்த்திரு நாடு!  வாழ்க எம் தேசம் நீடூழி!!


 110 கோடி இந்தியரின் ஒன்றுபட்ட சிந்தனையால் உலகை வெல்வோம்!

வந்தே மாதரம்!விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்,

ஞானா.

Monday, June 30, 2014

சதுரகிரி யாத்திரை                  உலகாளும் ஈசன் வாசம் புரியும் சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்    போதெல்லாம் மனதில் இனம் புரியா  உற்சாகம்,தெம்பு உத்வேகம் பரவும். குழந்தைகளின் குதூகலம் போன்ற மன  உணர்வுடன் , அந்த உணர்வின் மகிழ்வை, மனதில் இருத்திக்கொண்டு  யாத்திரையை இனிதே தொடங்க விளைந்தோம்!

இந்த முறை இராஜபாளையம் நண்பர் அழைக்க, நாம் உடனே கிளம்பினோம்,  ஈசன் குடி இருக்கும் அற்புத தவ ஞான மலைக்கு.

ஒரு பிரதோஷ தினத்தில், மாலை வேளையில் , பிரதோஷ காலத்தில் , ஈசனடி தொழுது யாத்திரையை தொடங்கினோம்.


முதல் முறை சதுரகிரி யாத்திரை தொடங்கும் அன்பர்க்காக, சில பயண விவர குறிப்புகள்!சதுரகிரி யாத்திரை , தாணிப்பாறை எனும் மலை அடிவாரத்திலிருந்து தொடங்குகிறது!


தாணிப்பாறை , வத்திராயிருப்பு எனும் சிற்றூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது! 

வத்திராயிருப்பு, 
மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர்  சாலையில் , 

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முன்,

கிருஷ்ணன் கோயில் 
எனும் ஊரிலிருந்து 
15 கி.மீ தொலைவில் உள்ளது! 

பேருந்துகளில்  வத்திராயிருப்பு வரை  சுலபமாக வந்து விடலாம், வத்திராயிருப்பிலிருந்து தாணிப்பாறை செல்ல நீண்ட நேர இடைவேளையில் வெகு சில பேருந்துகளே இயக்கப்படுவதால் , யாத்ரீகர்கள் ஷேர் ஆட்டோக்கள் மூலமே தாணிப்பாறை அடிவாரம் வர வேண்டும் என்பதை மனதில் இருத்தவும்!

இனி நாம் யாத்திரையைத்தொடங்குவோம்!

வழியில் தர்மபுரி அடியார் ஒருவரும்  இணைந்துகொள்ள, யாத்திரை நலமுடன் ஆரம்பம். கூடவே  நண்பரின் 10 வயது மகளும்.

பவுர்ணமிக்கு  முந்தைய பிரதோஷ தினம்  ஆகையால்,அடியார் கூட்டம் வந்து கொண்டே இருந்தது , வருவோர்  எல்லாம்,அன்று இரவு மலையில் தங்கிவிட்டு  மறுநாள் காலையில் ஈசனை தரிசித்துவிட்டு, முடிந்தால் பவுர்ணமி இரவும் தங்கிவிட்டு பிறகே திரும்புவர்.

அடிவாரத்தில் நிதானமாக சமவெளியில் ஆரம்பிக்கும் யாத்திரை போகப்போக சற்றே கடுமையானதாக ஆகும், எப்படி அடியார்க்கெல்லாம் ஈசன் கடும் சோதனைகளைக்கொடுத்து , புடம் போட்ட தங்கம் போல அவர்களை பக்குவமாக்கி, மனதினை செம்மையுறச்செய்து , 

ஆட்கொள்கின்றானோ  அவ்வண்ணம்  அன்பர்க்கெல்லாம் , இது சாதாரண மலை ஏற்றம்  இல்லையப்பா, இது உங்கள் வாழ்வையும், சிந்தையையும், செயலையும் மாற்றப்போகும் தெய்வீக  பயணமப்பா, இதிலே சிந்தை ஒருமித்து ஈஸ்வர சிந்தனையில்  மனதினை இருத்திக்கொண்டு,  உடல் வருத்தத்தினை மனதில் கொள்ளாமல்,பொருட்படுத்தாமல் கடுமையான விரத நிலையில் ஒரே சிந்தனை அதுவே  சிவ சிந்தனை எனும் உறுதிப்பாட்டில் கடுமை கொண்டு மலை ஏறும் போது , எத்தனை கடுமையான ஏற்றங்கள் வந்தால் என்ன?, நாடி வரும் அடியாரை அந்த ஈசனே, அன்பர் துயர் துடைக்க ஓடோடி வரும் உலக நாயகனே , வழி நடத்துவான், நம்மை , நிச்சயம் ஏற்றி விடுவான், நம்மை அளித்துக்காப்பான்.

இவ்வண்ணம் சிந்தையில் சிவனை வைத்து , சிவ நாம பிரார்த்தனையுடன் மலை ஏறும்போது . சற்று நேர நடையில் தாணிப்பாறை அடிவார கருப்பசாமி கோவிலும் சற்றே தொலைவில் முதல் மலை ஏற்றமும் வரும். சமீபத்திய  மழையால்,நம் பாதையில் சிற்றோடைகளை அடிக்கடி கடக்க நேர்ந்தது, அற்புத அனுபவம்! பிரதோஷ மாலை வேளை, மனதிற்கு உற்சாகம் ஊட்ட, நடையில் வேகம் தானாக வந்தது.ஆயினும், அனைவரும் நிதானமாகவே நடந்தோம், குழந்தை கூட வருவதால்.

ஒரு மணி நேரம்  ,  சிவன் மலையின் இயற்கை எழிலை கண்களால் பருகிக்கொண்டும், பறவைகளின் வரவேற்பு கீதங்களை காதால் இரசித்துக்கொண்டும் இவற்றை எல்லாம் அளித்து ,நமக்கு மன  உத்வேகம் தந்து  நம்மைக்காக்கும் ஈசனை மனதால் மீண்டும் பணிந்து நடக்கும்போது , சங்கிலிப்பாறை வந்துவிட்டது. யாத்திரை பாதையில்  பெரும்பாலும் நீரோடும் ஓடை குறுக்கிடும் இடம் அது. அதிக நீர் ஓடும் காலங்களில் ஆழம்  அதிகமாக இருக்கும் காரணத்தினால்,பாதையின் இடது புறம் இரண்டு பாறைகளின் மேல்,கனமான சங்கிலிகளைப் பிணைத்திருப்பர். அதனைப்பிடித்துக்கொண்டு , அன்பர் எல்லாம் அவ்வோடையைக்கடப்பர்.  அவ்வண்ணமே,நாமும் கடந்தோம். கொஞ்சம் தொலைவு சென்று சற்று நேரம் அமர்ந்தோம்.

பாறைகளினூடே யாத்திரையை  மீண்டும் தொடர்ந்தோம்.

அருமையான மாலைப்பொழுது,இருள் சூழும் நேரம் எனினும், பவுர்ணமி சமயம் ஆகையால், மனதிற்கு இதமளிக்கும் ஈஸ்வரப்பரிசமாய் நம்மைத்தழுவி , நான் இருக்கிறேன் நீ நட என நம்மைத்தொடர்ந்து கூடவே வரும் அரிய மூலிகைகளில் நனைந்து வரும் தென்றல் காற்றை  சுவாசித்து நடப்பதே, புத்துணர்வு தரும் பேரின்பம் ! 

மானிடப் பிறப்பின் அர்த்தம் தேடும், உலகாளும் உமை நாயகன்  ஈசனடி நாடும் பாத  யாத்திரையின் நடுப்பகுதியில் நாம்!

பாதைகளில் இப்போது மலையிலிருந்து ,  சுந்தர மகாலிங்கமாகவும் சந்தன மகாலிங்கமாகவும் விளங்கும் ஈசனை மனமார தரிசித்துவிட்டு , பிரதோஷ வழிபாட்டினை நிறைவாக முடித்துவிட்டு, ஆனந்தமாக, மலை இறங்கும் அன்பர் எல்லாம் கண்களில் மகிழ்ச்சி ஒளி பரவ, உலகம் ஆளும் ஈசனை அவன் பதம் பணிந்து,அவனிடம் சரணடைந்து , இனி நீயே எல்லாம், உண்டாக்கிய உன்னிடத்தில் வந்துவிட்டேன், எனை ஆட்கொண்டு , என்னால் சுற்றம்,நட்பு யாவரும் பலன் பெரும் வண்ணம் எனைச் சீராக்கு, மன அழுக்குகளை நீக்கி, ஆசை,துவேஷம் ஒழித்து , மனிதனாக என்னைக்கடைத்தேற்று , எனத்  தொழுது, அதனை அடைந்த மன எழுச்சியில் , அவர்கள் நெஞ்சம் குளிர்ந்து  , அன்பே  உருவாக, பரவசத்தில் நடந்து வருகிறார்கள்.

இதுதான், சித்தர்கள் போற்றும் ஈசன் மலையின் உயரிய தத்துவம் ! 

நாடும் அடியார்  யாவருக்கும், நலனே அளிக்கும் கருணைக்கடல் உறையும் இடமல்லவா? 

இறை அளித்த இயற்கை இன்பம் பருகிக்கொண்டே நடக்குங்கால் , சிவ தரிசனம் பெற்று மலை இறங்கும் அன்பர் யாவரும் அணிந்த திருநீற்று வாசம் அற்புத மூலிகைக் காற்றோடு கலந்து, நம் மூச்சில் மிக உயரிய ஞானவாசமாக , ஒரு கணம் இந்த உலகை மறக்கச்செய்து, நாம் இருப்பது கயிலாயத்திலா, எனும் பேரின்ப சிவானுபவத்தில் மனம்  திளைக்க,இந்த அற்புத அனுபவம் என்றும் பசுமையாக நம் மனதில் இருக்கும்! 


சிவ வாசமே , நம் சுவாசமானது!--- தொடர்வோம்..!

Saturday, June 14, 2014அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!

விரைவில் ஒரு புதிய பதிவில் சந்திப்போம்!

அன்புடன்,

ஞானகுமாரன்.

Monday, April 14, 2014

நல் வாழ்த்துக்கள்!அன்பர்கள் அனைவருக்கும் 

சித்திரை நன்னாள் 

நல் வாழ்த்துக்கள்!

Monday, February 24, 2014

வணக்கம்!

அன்பர் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!


தவிர்க்க இயலாத காரணங்களினால் , சில வாரங்களாக பதிவுகள் இட இயலாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

விரைவில்  மீண்டும் பதிவுகள் இடம்பெறும்,  தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


அன்புடன்,

ஞானகுமாரன்.


Monday, January 6, 2014

மற்றவரின் பேராசைகளுக்கு பெறற்கரிய இவ்வாழ்வா ?

எண்ணங்கள்!

எண்ணங்கள் நல்ல வண்ணம் அமைய 
நல் வாழ்வு அமைந்திட ,
... 
...
...
... !
சற்றே சிந்திப்போம்! 
செயல்படுவோம்!
வாழும் வாழ்வை மகத்துவமாக்குவோம்!

ஒரு முறையே இந்த வாழ்க்கை!
இப்போதே , இக்கணமே துயில் களைவோம்!

 எழுப்ப ஆள் இருந்தால்  விழிப்பேன் எனும் சோம்பல் களைவோம்!
எனக்கு நானே தலைவன் , என்னை நானே வழி நடத்தாமல் ,
ஏன் மற்றவர் வருவார் என நான் காத்திருக்க வேண்டும்?

அவரும் என்னைப்போல் ஒருவர் தானே, 

வானிலிருந்து வரவில்லையே?
தேவ தூதர் அல்லவே?

பின் ஏன் நான் என்னை சிறுமைப்படுத்திக்கொண்டு, மற்றவர் பின் 
அணி வகுக்க வேண்டும்?

கூட்டம் சேர்ப்போர் பின் ஏன் நான் ?

எதற்கு என் சுய மரியாதையை விட்டுவிட்டு, 
மற்றவரின் தொண்டனாகவேண்டும்?

மற்றவரின் பேராசைகளுக்கு பெறற்கரிய இவ்வாழ்வா ?
எனக்கும் கூட்டம் வேண்டாம்!
நானும் என் கருத்தை சமூகத்தின்பால் திணித்து,
மாயை வார்த்தைகளால் சக மனிதரை விட்டில்கள் போல ஈர்க்கும் 
செயற்கை வெளிச்சம் போல ,
என்னை முதன்மைப்படுத்த மாட்டேன்!

நான் நானாக இருந்தால் எல்லோர்க்கும் நல்லதுதானே!
பிறர் பொருள் விறும்பா, சுய நலம்  அற்ற,
சிந்திக்கததெரிந்த மனம் இருந்தால் , எனக்கு மட்டுமல்ல,
என்னைச்சுற்றியுள்ளோர் அனைவருக்கும் நலம்தானே! வெற்றிதானே!

மானிடம் காப்போம்!
மனிதம் வளர்ப்போம்!!

ஒரு வாழ்க்கை! ஒரே முறை! வாழ்வோமே, நமக்கேனும் நன்மையாக!


ஞானகுமாரன்.


New Posts will be in your mail!

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews