Monday, January 6, 2014

மற்றவரின் பேராசைகளுக்கு பெறற்கரிய இவ்வாழ்வா ?

எண்ணங்கள்!

எண்ணங்கள் நல்ல வண்ணம் அமைய 
நல் வாழ்வு அமைந்திட ,
... 
...
...
... !
சற்றே சிந்திப்போம்! 
செயல்படுவோம்!
வாழும் வாழ்வை மகத்துவமாக்குவோம்!

ஒரு முறையே இந்த வாழ்க்கை!
இப்போதே , இக்கணமே துயில் களைவோம்!

 எழுப்ப ஆள் இருந்தால்  விழிப்பேன் எனும் சோம்பல் களைவோம்!
எனக்கு நானே தலைவன் , என்னை நானே வழி நடத்தாமல் ,
ஏன் மற்றவர் வருவார் என நான் காத்திருக்க வேண்டும்?

அவரும் என்னைப்போல் ஒருவர் தானே, 

வானிலிருந்து வரவில்லையே?
தேவ தூதர் அல்லவே?

பின் ஏன் நான் என்னை சிறுமைப்படுத்திக்கொண்டு, மற்றவர் பின் 
அணி வகுக்க வேண்டும்?

கூட்டம் சேர்ப்போர் பின் ஏன் நான் ?

எதற்கு என் சுய மரியாதையை விட்டுவிட்டு, 
மற்றவரின் தொண்டனாகவேண்டும்?

மற்றவரின் பேராசைகளுக்கு பெறற்கரிய இவ்வாழ்வா ?
எனக்கும் கூட்டம் வேண்டாம்!
நானும் என் கருத்தை சமூகத்தின்பால் திணித்து,
மாயை வார்த்தைகளால் சக மனிதரை விட்டில்கள் போல ஈர்க்கும் 
செயற்கை வெளிச்சம் போல ,
என்னை முதன்மைப்படுத்த மாட்டேன்!

நான் நானாக இருந்தால் எல்லோர்க்கும் நல்லதுதானே!
பிறர் பொருள் விறும்பா, சுய நலம்  அற்ற,
சிந்திக்கததெரிந்த மனம் இருந்தால் , எனக்கு மட்டுமல்ல,
என்னைச்சுற்றியுள்ளோர் அனைவருக்கும் நலம்தானே! வெற்றிதானே!

மானிடம் காப்போம்!
மனிதம் வளர்ப்போம்!!

ஒரு வாழ்க்கை! ஒரே முறை! வாழ்வோமே, நமக்கேனும் நன்மையாக!


ஞானகுமாரன்.






No comments:

Post a Comment

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews