இன்று முண்டாசுக்கவிஞனின் பிறந்த நாள்!
தரணியெங்கும் தமிழர்க்கெல்லாம் தனிப்பெரும் அடையாளமாகத்திகழும், எம் மகாகவியின் பிறந்த நாள்!
தமிழ்தேசம் ஆண்ட மூவேந்தர் போல வாழும் காலத்தில் பெரும்பெயருடனும் வளமுடனும் பொருளுடனும் வாழவில்லை! ஆயினும்,
எம் தமிழ் மக்களுக்கு அஞ்சாமை தந்தான்!
பரங்கியருக்கு அடிபணியா வீரம் தந்தான்!
சுதந்திர வேட்கை கொண்ட எம்தமிழருக்கு தமிழ்வேள்வி படைத்தான்! தனியனாய் போராடினான்! தமிழ் கொண்டே!
சமூக நீதிக்காகவும்! தமிழர் தலை நிமிர்ந்து வாழவும்!
சரித்திரமாய் வாழ்கிறான்!
தமிழ் உள்ளவரை நின் புகழ் உலகாளும் அய்யா!
சாதிய சமூக விலங்கு அறுத்த தமிழ் சீராளியே!
வணங்குகிறோம் உம்மை!
வாழிய வாழியவே!!
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
மகாகவி.சுப்ரமணிய பாரதியார்.
No comments:
Post a Comment