சதுரகிரி யாத்திரை!
சதுரகிரி மலை ஏறும்
அன்பு உள்ளங்களே,
வழி கொடுங்கள் ,
மலை ஏறுவோருக்கு!
பாதையை அடைத்துக்கொண்டு,
நடக்க வேண்டாம்,
நாம் மட்டும் மலைக்கு
வரவில்லை!
மலை ஏறும்போதும்,
இறங்கும் போதும்,
இறை உணர்வாளர்களின்,
அன்பர்களின்,
மனதை வருத்தும்.,
நடையாளர்களின் அலைஇல்லா
பேசிகளினால் ,
3ம் தர திரைஇசை
வழியெங்கும்!
[ பாடல்கள் எனக் கூற
இயலாத வண்ணம்,
மிகை இசைக்கலவை]
இன்னும் பிற..!
யோசிப்போம்!
சமத்துவம் பேணுவோம்!
அனைவரின் சதுரகிரி யாத்திரை ,
நலமுடன் அமைய,
நாமும் நம் பங்களிப்பை ,
இயன்ற அளவு அளிப்போம்!
ஆன்ம நலம் பெருக்குவோம்!
சதுரகிரி நாடும் யாவருக்கும் ,
எப்போதும் அன்னமிடும்
கஞ்சி மடம்
போல இல்லாவிடினும் !
நம்மால் இயன்ற அளவு !!
No comments:
Post a Comment