விட்டு வைக்கலாம் இல்லையா,
எல்லோருக்கும், எப்போதும்
எல்லோருக்கும், எப்போதும்
எவ்வித வேறுபாடும் கொள்ளாது,
இலைகளை,கனிகளை,வேர்களை,
தன் நிழலை, நல்ல காற்றை வழங்கும்,
மரங்கள் போல், நாம் இல்லைதான் !
ஆயினும்,
நமது வருங்கால தலைமுறைகளுக்கும்,
தன்னலம் இல்லா மரங்களின் சேவைகள் தொடர,
விட்டு வைக்கலாம் இல்லையா,
வெட்டாமல் ?!
நட்டு வைக்கலாம் இல்லையா,
இடமெல்லாம்?!
மரங்களைப்போல, மனங்கள் இல்லாவிடினும்,
பட்ட கடனுக்காகவாவது...?!
இறுதி வாக்கியக் காரம்
ReplyDeleteஉறைத்தது
அவசியமான அற்புதமான கவிதை
வாழ்த்துக்களுடன்