1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த இச்சிவத்தலம், திருநாவுக்கரசரால்தேவாரப்பாடல் பெற்றதும் அருணகிரி நாதரால் திருப்புகழும் பாடப்பெற்ற சிறப்புவாய்ந்த திருத்தலமாகும்.
அரசலாறு நதி தந்த வளமும், கால வெள்ளத்தில் மூழ்கிடாமல், இன்னும் உயிர்ப்பாக , தன்னுள்ளே கிராமிய தன்மைகளை, காத்து நிற்கும் கூந்தலார் எனும் பெயர்கொண்ட இந்தச் சிற்றூர், குடந்தை - நாச்சியார்கோயில் - பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ளது.