பயத்தை எதிர்கொள்வது எப்படி?
உங்கள்
புன்னகை, ஒருவரின் நல்ல நாளை உருவாக்கும் - நயெல்லா.
தன்னம்பிக்கை பயிற்சியாளர், ஊக்கசக்தி
மற்றும் விழிப்புநிலை பயிற்சியாளர்.
நயெல்லா, பெயர் நமக்கு பரிச்சயமில்லாவிட்டாலும்,
இவர் அளிக்கும் பயிற்சிகள், நம்மில் பலருக்கும் தேவைப்படும், அத்தியாவசியமான
ஒன்றாகும்.
போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், பலரும்
மன அழுத்த பாதிப்பில் சிக்கியிருப்போம், இலக்குகளை அடைவதில் ஏற்படும் குறுக்கீடுகள்,
தடைகளால் மனம் கலங்கி, செயலை முடிக்கமுடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் பலரும், தடுமாறி
நிற்கிறார்கள்.
பலருக்கும் ஏற்படும் பொதுவான இந்தப்
பிரச்னைகளை, சரியாக கணித்து, அவர்களை தட்டிக்கொடுத்து, முன்னேற வைக்க, இங்கே
யாருக்கும் நேரமில்லை, அதற்கான ஆட்களும் அதிகமில்லை.
இதுபோன்ற தடைகளில் துவண்டு, தோல்விகளில்
உழலும் நண்பர்களுக்கு, ஆறுதலாக, அவர்களின் தடையை உடைத்து, பயத்தை நொறுக்கி, இலக்கை
நோக்கி விரைந்து முன்னேறவைக்க தக்க அனுபவம் மற்றும் மனித மனவளங்களை சிறப்பாக
வழிநடத்தத் தெரிந்த ஆற்றல்மிக்கவர்கள் தான், தன்னம்பிக்கை பயிற்சியாளர்கள்.
புற்றீசல் போல பலரும், நம்மைச்சுற்றி, தாம் மனநல கோச், தன்னம்பிக்கை
பயிற்சியாளர் என்று கூறி, பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கும் கால கட்டத்தில்,
இங்கிலாந்து தேச உளவியல் பயிற்சியாளர். நயெல்லா
அவர்கள், தமது பயிற்சிகளை இணையத்தில், யூடியூப் தளத்தில், மக்கள், இலவசமாகப் பார்த்து
பயன்பெற வைத்திருக்கிறார்.
அதில் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அறிந்து,
நீங்களே உங்களை மாற்றிக்கொள்ளமுடியும்.
இல்லையென்றால், இவரிடம் சில மணி நேர
நேரடிப்பயிற்சிகளை மேற்கொண்டாலே, இழந்த வாய்ப்புகளை மீண்டும் அடைந்து, வெற்றி
இலக்கை அடைவது உறுதி.
வீடியோவில் பயிற்சியாளர் சொல்லும்
எளிமையான கருத்துகளை, அமைதியாகக் கேளுங்கள்.வாழ்வில் கடைபிடித்து வெல்லுங்கள்.
இவருடைய யூடியூப் தளத்தில், பல வீடியோ
தொகுப்புகள் இருந்தாலும், அதில் ஒரு தொகுப்பை இங்கே காண்போம்.
பயத்தை எதிர்கொள்ளுங்கள்.
நம்மில் நிறையபேர், தோல்வியை சந்திக்கத்
தயங்கி, அதனால் ஏற்படும் பயத்தையும் விட்டு விலகி ஓட, எண்ணுகிறோம். அதுவே, நாம்
செய்யும் தவறு, நம்மை தோல்விக்கு அழைத்துச்செல்ல நாமே வழி ஏற்படுத்துகிறோம்,
என்கிறார், தன்னம்பிக்கை பயிற்சியாளர். நயெல்லா.
இதுபோன்ற கருத்துகளை, கீழேயுள்ள லிங்கை க்ளிக்
செய்து, கேளுங்கள்.
விளக்கம் தேவைப்பட்டால், ஈமெயிலில்
தொடர்பு கொள்ளலாம், தேவையெனில், நேரடியாக, பயிற்சியும் எடுத்துக்கொள்ளலாம். சில
மணி நேரப் பயிற்சிகளின் மூலம், பெருமளவு நன்மைகளைத் தொடர்ந்து பெற, உங்களுக்கு
எளிய வழிகளை, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தைக் கூறி, அவற்றை தினமும்
கடைபிடிக்க வைத்துவிடுவார்.
Nayalla, Motivator,
Confidence, Empowerment and Happiness Coach,
Intuitive Readings.
தோல்வியில் உழன்று,
வாழ்வில் வெற்றிபெறத்
துடிக்கும் இளைஞர்களே! இளைஞிகளே!,
மற்றும் பல நிலைகளில் உள்ளோரே!
உங்களை நீங்களே, ஒரு முறை உரசிப்
பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு!
இலக்கை அடையும் காலத்தை, நீங்களே முடிவு செய்யமுடியும்!.
வாழ்த்துக்களுடன்,
ஞானா.
Gnaana.