வானம் வசப்படும்!
தொட்டுவிடும் தூரம்தான்!
ஏணிப்படிகள் !
எல்லாம் சொல்லி, இருப்பவனைத் தூக்கி மேலே வீசினோம்!
இங்கே, இருக்க, என்ன செய்தோம்?
இருக்க இடம் கொடாமல், பறக்க வழி சொல்லும் பயனிலிகள்!
ஊருக்கு மட்டும் தான், உபதேசி!
தனக்கென்றால், எவன் காலிலேனும் விழுந்து,
தன்னிடம் தக்க வைப்பவன்தான்,
இன்று சிறந்த சிந்தனையாளன்!
சமூக சேவகன்!
புரட்சிக்காரன்!
கலியுகத்தில், விளக்கு மட்டும் தலைகீழாக எரியவில்லை!
மனிதனும்தான்!
மனிதாபிமானத்தை எரித்து!