Thursday, October 1, 2015

மனித மன வளம்

எங்கும் அன்பு நிலைத்திட 

எதிலும் சமநீதி கிடைத்திட 

எல்லோர்க்கும் எல்லாமும் அமைந்திட 

மனித மன வளம் பேணுவோம்!

யாவரையும் நம்மைப்போலேக்  கொள்வோம்!


யாவரும் நாமே ஆனபின், 

நமக்கேது தாழ்வு ,வீழ்ச்சி ?!

நமக்கேது வெற்றி தோல்வி?!

நமக்கேது இன்ப துன்பம்?!


நமக்கே உண்டு வளமிக்க பொற்காலம்!

வாருங்கள்! புதிய உலகை படைப்போம்!


செவ்வாய் கிரகத்திற்கு செல்லாமலே புது உலகு நமது புவியிலே படைப்போம்!

மாசற்ற மனங்கள் வெல்லும் காலம் விரைவில்...!!
நம்பிக்கை கொண்டு, மலையென எதிர்வரும் மாச்சரியங்கள் ஒழிப்போம்!


எல்லோரும் இணைவோம்! 
புது உலகை படைப்போம்!!
புதுமையால் ஆள்வோம்!!!

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews