சரித்திரங்கள் மறைவதில்லை!
கால காலமாய் கலாம் வாழ்வைக்கூறப்போகும் வருங்கால தலைமுறைகளுக்கு
எமை சாட்சியாய் இருக்கப்பணித்த இறைவா!
வணங்குகிறோம்!!
கனவுகளால் தேசத்தைக்கவர்ந்தவனே!
இளைஞர்களின் ஆதர்சன சக்தியே!
கனவின் அர்த்தம் உரைத்தவனே!
இந்தியாவின் பெருமையே ! எளிமையின் முகவரியே!
தேச சிறார்களை ஆசீர்வதித்து அவர்களின் உந்து சக்தியாக விளங்கியவனே!
கிடக்காமல் உயிர் துறந்தவனே!
நேசித்த மாணவர் முன் மாய்ந்தவனே!
உன் விருப்பம் நீ உடல் நீத்தாய்!
உயிரை எம் இளைய தேசத்திடம் விட்டுவிட்டு!
கண்ணீர் என்பது காய்ந்துவிடும்!
நினைவுகள் மட்டும் பசுமரத்தாணியாய்...!
என்றும் எம்மை வழிநடத்தும் ...!
வருங்கால பாரதம் உன் கனவின் துணையோடு உலகை வெல்லும்!
உன் மாசற்ற வாழ்விற்கு உரையாய் அமையும்!
வெல்க எம் தேசம்!
ஜெய் ஹிந்த்!