மனித மனங்களின் விபரீதம்!
காற்று அறியாத திசைகளா?
காலம் அறியாத மாற்றங்களா?
கடமை மறக்காத சூரியனா?
தினமும் கடக்காத நாட்களா?
இயற்கையின் போக்கு,
நியதிக்குட்பட்டே
இங்கே நடக்கும்போது,
மனித மனங்களில் ஏன் விபரீதம்!?
நிரந்தரம் போலே எண்ணி,
ஆட்டங்கள் ஆடுவதும்,
எளியோரை வதைப்பதும்,
அறிவீனமே!
காலங்கள் மாறும்போது,
வயது முதிர்வில்
ஞானோதயம்
கிடைக்காவிட்டாலும்,
செயல்களின் வலிமை வாட்டும்!
மனதை வளமாக்கி,
மக்கள் பணிகளில் மூழ்கினால்,
மனமது செம்மையாகும்!
அமைதியான
தன்னலமற்ற
பொதுவாழ்வின்
பொருளும் விளங்கும் !
No comments:
Post a Comment