மூலிகை இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரும் கோடை. நம்மில் எத்தனை பேர் அவற்றை முறையாக அறிந்து கொண்டிருக்கிறோம்? கிராமங்களில் சாலையோரம், வயல்வெளிகளில்,ஆற்றுப்படுகைகளில், எத்தனை எத்தனை அருமையான, நம் உடல் நலம் பேணக்கூடிய மூலிகைகள் வளர்ந்து இருக்கின்றன!
அருமையான ஒரு மூலிகை,குப்பைமேனி எங்கும் காணக் கிடைக்கும்.அந்த மூலிகை மிக அருமையான உடல் நலம் பேணும் மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை.
வெளிப்பூச்சாக சிரங்கு,தேமல் போன்ற தோல் நோய்களுக்கும், உள்ளுக்கு மருந்தாக மிளகு சேர்த்து முழுச் செடியும் நம் உடல் இரத்தத்தை சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக செய்யும்.
இப்படி எத்தனை எத்தனை மகத்துவம் கொண்ட மூலிகைகள் நம் அருகில்.
அறிவோம் மூலிகைகளை! உடல் நலம் காப்போம் , இயற்கை அளித்த பக்க விளைவுகள் இல்லாத வரம் - மூலிகைகள்!
நாம் மூலிகைகள் பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறோம் ஆயினும் நாம் இருக்கும் வாழ்வியல் சூழலில் , மூலிகைகளை தேடிச் செல்ல முடிய வில்லை என்று வருந்துபவர்களுக்கும் , மூலிகை மூலம் நிவாரணம் தேட எண்ணும் நண்பர்களுக்கும், இத்தளம் தன்னாலான உதவிகள் செய்யும்.
No comments:
Post a Comment